விடாமுயற்சி படத்தில் நான்கு பிரபலங்கள் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ள நான்கு பிரபலங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது திரிஷா முதன்மை நாயகியாக நடிக்க தமன்னா இரண்டாவது நாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் வில்லன்களாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தையில் நடைபெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இவர்கள் மட்டுமல்லாமல் மெயின் வில்லனாக முன்னணி நடிகர் ஒருவர் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் விடாமுயற்சி திரைப்படம் சிறப்பான சம்பவமாக இருக்கும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.