சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நடிகை மரியா ஆகியோர் நடித்துள்ளனர். மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மட்டும் டைட்டில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து உள்ள நிலையில்.

இப்படத்திற்கான அடுத்த புதிய தகவலை பட குழு தெரிவித்திருக்கிறது. அதன்படி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் செப்டம்பர் 1ஆம் தேதியான நாளை வெளியாகும் என்ற அதிகாரவபூர்வமான செய்தியை படகுழு தெரிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.