கலகத்தலைவன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கலகத்தலைவன்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. மேலும் இந்த படத்தில் ஆரவ் வில்லனாக நடிக்க நிதி அகர்வால் நாயகியாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பாக கதை, அதிரடியான ஆக்ஷன், ஆரவ், உதயநிதி ஸ்டாலினின் அட்டகாசமான நடிப்பு என படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் இந்த படம் முதல் நாளில் ரூபாய் 80 லட்சம் முதல் 1 கோடி வரை வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.