Bigg Boss 4 Finalize Contestant List
Bigg Boss 4 Finalize Contestant List

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிக்கு முதல் இரண்டு போட்டியாளர்கள் உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

First 2 Contestant in BB4 : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது தொடர்ந்து நான்காவது சீசன் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

ஜூன் மாதமே தொடங்கியிருக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி பரவி வரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தள்ளிப் போய் வருகிறது. எப்படியும் அக்டோபர் மாதத்தில் சீசன் 4 தொடங்கி விடும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

தளபதி விஜயின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டா வாயடைச்சுப் போயிடுவீங்க!

இந்த நான்காவது சீசனில் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் தயாரிப்பு நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. சர்ச்சைக்குரிய இளைஞர்களிடையே பாப்புலரான பிரபலங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

அந்த வகையில் முதல் போட்டியாளராக இடுப்பு மடிப்பை காட்டி ஒட்டுமொத்த இளைஞர்களையும் சுண்டி இழுத்த ரம்யா பாண்டியனை பிக்பாஸ் குழுவினர் தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவருக்கு அடுத்ததாக டிக் டாக்கில் நாளுக்கு நாள் கவர்ச்சி ஆட்டம் போட்டு பெரும் சர்ச்சைக்குரியவராக பிரபலமான இலக்கியாவை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இலக்கியாவை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புவதால் எப்படியும் கவர்ச்சி ஆட்டத்திற்கு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

வனிதாவை போல ஒருவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பவும் திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.