
பாரதி கண்ணம்மா சீசன் 2 இழுத்து மூடப்பட்ட நிலையில் சேனல் மாறியுள்ளார் பரீனா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. முதல் சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாக தொடங்கி இறுதி கட்டத்தில் சலிப்பை உண்டாக்கி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து மக்களின் விருப்பம் இல்லாமல் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது.

இரண்டாவது சீசன் வேண்டாம் வேண்டாம் என சொல்லியும் விஜய் டிவி முதல் சீசன் முடிவடைந்த மறுநாளில் இருந்தே ஒளிபரப்பியது. மக்களின் வரவேற்பு இல்லாமல் ஒளிபரப்பை தொடங்கிய இந்த சீரியல் தொடர்ந்து சறுக்கத்தை சந்தித்து வந்த நிலையில் இன்றுடன் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது.
இப்படியான நிலையில் இரண்டு சீசன்களிலும் வில்லியாக நடித்து வந்த வெண்பா தற்போது வேறு சேனலுக்கு தாவியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆமாம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெகு விரைவில் ஒளிபரப்பாக உள்ள டக்கரு டக்கரு என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.