சன் டிவி நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது. 

Vadivelu in Top Cook Dupe Cook Show : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதனை நிகழ்ச்சிக்கு போட்டியாக தற்போது சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 

சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் நடுவராக வெங்கடேஷ் பட் பங்கேற்க விஜய் டிவி பிரபலங்கள் பலர் கோமாளிகளாக கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலுவை களம் இறக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தெரிய வந்துள்ளது. 

வடிவேலு கேட்ட பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க சன் டிவி ஒப்புக்கொண்டால் அவர் நிச்சயம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வடிவேலு களம் இறங்கினால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பெரிய பாதிப்பாக இருக்கும் என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.