Web Ad 2

கமலின் லேட்டஸ்ட் லுக்: ரசிகர்கள் கோரிக்கை..

Web Ads

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தை தொடர்ந்து, அன்பறிவ் இயக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன்.

இதற்கிடையில் கமல், தன் லுக்கை லைட்டாக மாற்றி இருக்கின்றார். அந்தளவிற்கு பெரிய மாற்றங்கள் கமலின் லுக்கில் இல்லை என்றாலும், அவரின் லேட்டஸ்ட் லுக் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

இந்த லுக்கில், கமல் ‘கல்கி 2’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபாஸ் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் கல்கி. 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு வெளியானது.

அந்த பாகத்தில் கமல் சில நிமிடங்கள் தான் வந்திருந்தார். இதையடுத்து, இரண்டாம் பாகத்தில் கமல், பெரும்பாலான காட்சிகளில் வருவார் என சொல்லப்பட்டது. அதன்படி ‘கல்கி 2’ திரைப்படத்தில் கமல் சுமார் 90 நிமிட காட்சிகளில் வருவார் என தகவல்கள் வந்துள்ளது.

கமல் இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கின்றார் என்ற தகவலை தொடர்ந்து, கமலின் லேட்டஸ்ட் லுக் செம மாஸாக இருப்பதால், கண்டிப்பாக ‘கல்கி 2’ படத்தில் அவரின் கதாபாத்திரம் வெயிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த லுக்கை பார்த்து அசந்துபோன ரசிகர்கள், கமலுக்கு ஒரு கோரிக்கையை வைத்து வருகின்றனர். அதாவது, ரஜினியுடன் கமல் நடிக்கும் படத்திலும் இதே லுக்கில் கமலை நடிக்க சொல்லி அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்தளவிற்கு கமலின் லேட்டஸ்ட் லுக் கவர்ந்திருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கு முன்பு கமல் நூற்றுக்கணக்கான லுக்கில் தோன்றியிருக்கின்றார். ஒவ்வொரு லுக்கும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதியும் அளவிற்கு அவரின் தோற்றமும் நடிப்பும் இருந்துள்ளது.

அவ்வகையில், 46 வருடங்கள் கழித்து ரஜினியும் கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். அந்த படத்தின் இயக்குனர் யார்? வில்லன் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், இப்படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், இந்தியளவில் சாதனை படைக்கும் படமாக இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

fans wants kamalhaasan to act with rajini in this getup
fans wants kamalhaasan to act with rajini in this getup