
நல்லா போயிட்டு இருந்த சீரியல்ல இப்படியா சொதப்புவீங்க என பாக்கியலட்சுமி சீரியலை விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பெரும்பாலான காட்சிகள் சமைக்க வந்த இடத்தில் பாக்கியா மொபைலில் டவர் இல்லாமல் இனியாவின் ரிசல்ட் என்னாச்சு என பரிதவித்து வருகிறார்.

இதையெல்லாம் பார்த்து ரசிகர்கள் உங்களுக்கே இதெல்லாம் ஓவரா தெரியலையா? அளந்துவிடலாம் ஆனால் அதுக்கு ஒரு அளவில்லையா என விமர்சனம் செய்து வருகின்றனர்.
சென்னை சிட்டிக்குள் இருக்கும் பாக்யாவுக்கு மொபைலில் டவர் இல்லையா? சரி அவருக்கு தான் டவர் இல்லனா அங்க இருக்க யாருக்குமேவா டவர் இல்லை? இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இவ்வளவு நாளா விறுவிறுப்பாக போயிட்டு இருந்த சீரியலை இப்படி சொதப்பலாமா? என கிண்டலடித்து வருகின்றனர்.

அதேபோல் சமைக்கப் போன பாக்கியா அங்கு போய் தான் அது நிச்சயதார்த்த பங்க்ஷன் 50 பேருக்கு சமைக்க வேண்டும் என்பதையெல்லாம் தெரிந்து கொள்கிறார். ஒரு சமையல் காண்ட்ராக்டர் இதெல்லாம் முன்பே தெரிந்து வைத்திருக்க மாட்டாரா இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என கேள்வி எழுப்புகின்றனர்.
அது மட்டுமல்லாமல் கொஞ்சமா காய்கறிகளை வைத்துக் கொண்டு பெரிய பாத்திரத்தில் சமைப்பது போல பில்டப் எல்லாம் காட்டுகின்றனர். செல்வியின் வழக்கமான குரலை விட்டு விட்டு இன்றைய எபிசோடில் குரல் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதும் சொதப்பலாகவே பார்க்கப்படுகிறது.
