Fans Request to Master Team

மாஸ்டர் படக்குழுவினருக்கு ரசிகர்கள் கோரிக்கை ஒன்றை வைத்து வருகின்றனர்.

Fans Request to Master Team : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், தீனா, பிரேம்குமார், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் இப்படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். அதாவது மாஸ்டர் திரைப்படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் விஜய்யின் மார்க்கெட்டை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் விஜய் ரசிகர்கள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். ரசிகர்களின் கோரிக்கைக்கு படக்குழு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.