பத்தி தாண்டவம் சுற்றில் போட்டியாளர்கள் பட்டம் கிளப்ப வனிதாவை வம்புக்கு இழுத்துள்ளனர் ரசிகர்கள்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ டான்ஸ் ஜோடி டான்ஸ் ரி லோடட் 2. ஆர். ஜே விஜய் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பக்தி தாண்டவம் சுற்று நடைபெற உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியாளர்களும் வெறித்தனமாக நடனமாடி இருப்பதை பார்த்து வனிதாவை வம்பிழுக்க தொடங்கினர்.
பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சாமி வேடம் போட்டு நடனமாடிய வனிதா டான்ஸை யாரோடும் கம்பேர் பண்ணாதீங்க என வாக்குவாதம் செய்தார். அதை நினைவு கூர்ந்து வனிதாவுக்கு இதை போட்டு காட்டுங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.