Fans are shocked by the photo published by Khushboo
Fans are shocked by the photo published by Khushboo

பிக் பாஸ் சீசன் ஒன் சக்தியுடன் குஷ்பு வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக தடம் பதித்தவர் பி வாசு. இவரது மகனான சக்தி தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு நினைத்தாலே இனிக்கும் உட்பட ஒரு சில படங்களில் நடித்தார்.

தொடர்ந்து இவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலமாகவும் சக்திக்கு பெரிய அளவில் பெயர் கிடைக்கவில்லை. ஜூலிக்கு ஆதரவாக செயல்பட்டதால் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.

இந்த நிலையில் கொஞ்ச காலமாக இவருடைய போட்டோக்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது குஷ்பூ சக்தியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில் சக்தி மேலும் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.