கங்குவா படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் கங்குவா. 3டி தொழில்நுட்பத்தின் 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

வெகு விரைவில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படி அண்ணன் நிலையில் படத்தில் வில்லனாக நடிப்பது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஆமாம் இந்த படத்தில் நட்டி நடராஜ் அவர்கள் வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது கங்குவா படத்தில் வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.