பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார் பிரபல நடிகர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தனத்திற்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக தெரியவந்த நிலையில் அதை வீட்டுக்கு தெரியாமல் மறைத்து வருகிறார்.

இப்படியான நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, பாரதி கண்ணம்மா சீசன் 1 சீரியலில் பாரதியாக நடித்த அருண் பிரசாத் தனத்திற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவராக இந்த சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனத்திற்கு இருக்கும் பிரச்சினை வீட்டுக்கு தெரிய வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் வேலையில் இறங்குவார்கள், அடுத்ததாக கதைக்களம் அப்படித்தான் நகரும் என சொல்லப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.