ஆஸ்கார் விருதின் உறுப்பினராக நடிகர் சூர்யா இணைந்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Famous actor join the Oscar award team:

திரை உலகில் மிகப்பெரிய விருதுகளில் முக்கியமான ஒன்றுதான் “ஆஸ்கார் விருது”. இந்த விருது நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில் பல பிரிவுகளில் இருந்து தேர்வு செய்தபிறகு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆஸ்கார் விருதின் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

ஆஸ்கார் விருதின் உறுப்பினராக இணைந்துள்ள பிரபல நடிகர் - உற்சாகத்தில் ரசிகர்கள்.

இந்த ஆஸ்கார் கமிட்டியின் உறுப்பினர்கள் பற்றிய விவரம் ஆண்டுதோறும் மாறுபட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் நடிகர்கள், இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், நடன இயக்குனர்கள் என்று பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது.

ஆஸ்கார் விருதின் உறுப்பினராக இணைந்துள்ள பிரபல நடிகர் - உற்சாகத்தில் ரசிகர்கள்.

இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இந்த ஆஸ்கார் விருதில் சூர்யாவின் நடிப்பில் வெளியான “சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம்” ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கெடுத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.