மாமன்னன் படத்தில் நடிக்க பஹத் பாசில் வாங்கிய சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உட்பட பலரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மாமன்னன்.

ஜாதி ரீதியாக ஒடுக்குமுறைகளை தோலுரித்து காட்டி இருந்தார் மாரி செல்வராஜ். இந்த படத்தில் நடித்திருந்த அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். ஆனாலும் பஹத் பாசில் நடிப்பு பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக இரண்டு முதல் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.