Facebook down
Facebook down

Facebook down – உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ் அப் , இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளின் சேவை சில பயனாளர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கோடி கணக்கில் பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளம் பேஸ்புக்.. பயனாளர்கள் அதிகாலை கண் விழிப்பதும் இரவு தூங்கும் போது கடைசியாக பார்த்துவிட்டு தூங்குவதும் பேஸ்புக்கைத்தான் என்ற நிலைமைதான் தற்போது உலகெங்கும் உள்ள கலாச்சாரம்.

செய்திகள், பிரச்சாரம், வியாபாரங்கள், விளம்பரங்கள் என எல்லாமும் கிடைக்கும் மிகப்பெரிய சந்தையாக பேஸ்புக் செயலி உள்ளது.

சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய கார்பரேட் நிறுவனங்கள் வரை, பேஸ்புக்கை பெரிய அளவில் வணிக ரீதியாக பயன்படுத்தி வருகிறது..

இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர், வாட்ஸ் அப் ஆகியவை தனது இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் பேஸ்புக்கில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், புதிய பதிவுகளை பதிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இதனால் ஃபேஸ்புக் பயனாளர்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர்.

பேஸ்புக், இன்ஸ்டாவில் பிரச்னை என்றதும் டிவிட்டர் பக்கம் குவிந்துள்ள இணையவாசிகள் #instagramdown, #FacebookDown என்ற ஹேஸ்டேக்குகளில் கருத்துகளை தெரிவித்தும், சமூக வலைதளம் செயல் அற்று உள்ளதை கிண்டல்செய்தும் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம், “பாதிக்கப்பட்ட சேவையை சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட சேவை விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்”.
மேலும் சைபர் தாக்குதலால் இவ்வாறு சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here