
1979-ம் ஆண்டில் ரஜினி கைதான சம்பவம் மீண்டும் பேசு பொருளாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு லோகேஷ் கனகராஜ், ஞானவேல் என அடுத்தடுத்து பிரபல இயக்குனர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

மேலும் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாக உள்ளது, இப்படியான நிலையில் ரஜினிகாந்த் 1979-ம் ஆண்டில் கைதான சம்பவம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது 1979-ம் ஆண்டு குடிபோதையில் விமான நிலையத்தில் ரகளையில் ஈடுபட போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அப்போதைய செய்தி தாளில் இந்த செய்தி வெளியானது.
இந்த செய்தி தாள் புகைப்படம் திடீரென சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாக மாறி உள்ளது.
