
14 வருட இடைவெளிக்குப் பிறகு கங்குவா படத்திற்காக சூரியா செய்யும் செயல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து தற்போது அதையெல்லாம் எதிர்த்து தற்போது நடிப்பு திறமையால் நடிப்பின் நாயகனாக விளங்கி வருபவர் நடிகர் சூர்யா.

இவரது நடிப்பில் இறுதியாக சூரரை போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவார் என்ற வரலாற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக கிட்டதட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு நடிகர் சூர்யா சிக்ஸ் பேக் வைத்து உள்ளார். இது குறித்த போட்டோவை டிடி ராஜசேகர் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா அயன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் சிக்ஸ் பேக் உடன் காட்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
