பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 உருவாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் முதல் பாகம் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது.

அதே சமயம் பார்ட் 2 ஒளிப்பரப்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் தற்போது சுஜிதா மற்றும் குமரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துள்ளனர். பிறகு தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்த ஒரு வழியாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால் தற்போது மீண்டும் நடிக்க மறுப்பு தெரிவிக்க தொடங்கி இருப்பதால் இவர்களுக்கு பதிலாக வேறு யாரையாவது வைத்து சீரியலை தொடங்கலாம், அல்லது முதல் சீசனோடு முடித்து விடலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.