40 வயது ஆயிடுச்சு இனிமே அப்படி நடிக்க மாட்டேன் என தனுஷ் கொடுத்த பதிலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் மரியான்.

பரத் பாலா இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற இந்த படம் வெளியாகி 10 வருடங்கள் ஆன நிலையில் இவர்கள் மூவரும் இணைந்து லைவ் வீடியோவில் ரசிகர்களுடன் உரையாடினர். அப்போது இயக்குனர் பரத் பாலா நீங்கள் தொடர்ந்து இதேபோன்று காதல் படத்தில் நடிக்க வேண்டும் அதனை நாங்கள் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதைக்கேட்ட தனுஷ் சிரித்துக்கொண்டே எனக்கு இப்போ 40 வயது ஆயிடுச்சு இனிமே காதல் கதை எல்லாம் செட் ஆகாது. அடுத்த தலைமுறையினர் பண்ணட்டும் என தெரிவித்துள்ளார். இதனால் தனுஷை இனி காதல் படங்களில் பார்க்க முடியாதா என அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

50 வயதுக்கு மேல் பல நடிகர்கள் காதல் கதைகளில் நடித்து வரும்போது உங்களுக்கு என்ன தலைவா? நீங்கள் தொடர்ந்து காதல் படங்களில் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.