எதிர் நீச்சல் சீரியலில் நடந்த சொதப்பல் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடில் ஜனனி கேட்ட கேள்விகளுக்கு ஜீவானந்தம் சரியாக பதில் சொல்லாதது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

ஜனனி அப்பத்தாவை ஏமாற்றி கை ரேகை எடுத்து சொத்துக்களை மாற்றி கொண்டதாக சத்தம் போட ஜீவானந்தம் யார் இந்த பெண் என பர்ஹானாவை பார்க்க அவர் இந்த பொண்ணு தான் ஜனனி என்று சொல்கிறார்.

அதே போல் இன்னொரு காட்சியில் ஜனனி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் ஜீவானந்தம் ஷக்தியுடன் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட்டது, குணசேகரன் ஈஸ்வரி அம்மாவின் சாவுக்கு சென்று வந்த போது தலையில் தண்ணீர் ஊற்றியது, ஷக்தி கழுத்தை பிடித்து வெளியே தள்ளியது என ஒன்று விடாமல் மொத்த கதையையும் சொல்கிறார்.

ஆரம்பத்தில் இவர் தான் ஜனனி என்றே தெரியாத ஜீவானந்தம் இதையெல்லாம் மட்டும் எப்படி தெரிந்து கொண்டார், இதெல்லாம் நம்புற மாதிரி இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மேலும் ஜீவானந்தம் கேரக்டர் முன்பு இருந்தது போல சுவாரஸ்யமாக இல்லை என்றும் கூறி வருகின்றனர். ரசிகர்கள் மனதில் நம்பர் 1 இடம் பிடித்துள்ள சீரியலில் இப்படி எல்லாம் சொதப்பலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.