எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து முக்கியமான பிரபலம் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் முதல் பாகம் முடிந்து மீண்டும் என் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் தர்ஷன் மற்றும் அன்புகரசி திருமணத்தை நடத்திய ஆக வேண்டும் என குணசேகரன் முடிவோடு இருக்கிறார்.
மறுபக்கம் பெண்கள் தர்ஷன் மற்றும் பார்கவி திருமணம் நடக்க வேண்டும் என போராடி வருகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்று பரபரப்பான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் நடித்த ஒரு முக்கியமான பிரபல அதாவது சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சபரி சீரியலில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தகவல் இணைத்தும் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என பொறுத்திருந்து பார்க்கலாம்.
