எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலக முடிவெடுத்துள்ளார் ஆதிரை.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

முதலில் நெகட்டிவ் கேரட்டில் நடித்து வந்த அதிரையில் கதாபாத்திரம் தற்போது பாசிட்டிவ்வாக மாற்றப்பட்டு ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஆனால் ஆதரையின் கல்யாண கான்செப்ட் ஆரம்பித்ததில் இருந்து சீரியல் போரடிக்க தொடங்கி விட்டதாக தொடர்ந்து கமெண்ட் குவிந்து வந்தது.

இதனால் சீரியல் இருந்து விலக முடிவு எடுத்ததாக அதிரை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வந்து முதலில் என்னுடைய கேரக்டர் நெகட்டிவாக இருந்தது அப்போது கூட நான் பெரிதாக கவலைப்படவில்லை. பாசிட்டிவாக மாறிய பிறகு நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது. ஆனால் கல்யாணம் கான்செப்ட் தொடங்கியது எல்லோரும் போரடிக்கிறது என சொல்ல தொடங்கியதால் இந்த சீரியலில் இருந்து விலகி விடலாம் என்று முடிவெடுத்தேன்.

ஆனால் செட்டில் இருந்தவர்கள் எல்லோரும் எனக்கு அட்வைஸ் செய்தார்கள். கல்யாண நாள் எபிசோட் டிஆர்பி-யில் சாதனை படைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என தெரிவித்துள்ளார்.