எதிர் நீச்சல் ரேணுகாவின் ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ரேணுகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரிய தர்ஷினி. சீரியல் நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான இவர் தற்போது ஷாப்பிங் சென்றுள்ளார்.
தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தான் ஆடி தள்ளுபடியில் ஷாப்பிங் செய்துள்ளார். விதவிதமான ஆடைகள், எக்கச்சக்கமான கலெக்சனில் புடவைகளை பார்த்து வியந்துள்ளார்.
நான் ஷாப்பிங் போறனு சொன்னாலே வீட்ல எல்லாரும் பயப்படுவார்கள் எனவும் ரேணுகா இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். பெண்கள் புடவை எடுக்க வந்தால் ஏன் லேட்டாகுது என்றெல்லாம் விளக்கம் அளித்துள்ளார்.
இவரது இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.