
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் நடிகை.
Ethir Neechal Nandini Admitted in Hospital : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து இழப்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது அவர் இல்லாமல் சீரியல் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. இதே சீரியலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் கதிரின் மனைவியாக நடித்து வருகிறார் ஹரிப்பிரியா.
தற்போது அவர் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கையில் டிரிப்ஸ் ஏறும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த சீரியல் நடிகர்கள் எல்லாருக்கும் கண்ணு பட்டு போச்சு போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
