தமிழா தமிழா நிகழ்ச்சி ஜோதிடர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் குணசேகரனுக்கு புது சிக்கல் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் நடிகர் மாரிமுத்து. பல படங்களில் நடித்து பெரிய அளவில் பெயர் கிடைக்காத இவருக்கு தற்போது எதிர்நீச்சல் சீரியல் மிகப்பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

ஆதி குணசேகரனாக அனைவரையும் அடக்கி ஆண்டு வருகிறார். வில்லத்தனம், காமெடி, எமோஷன் என அனைத்தையும் அள்ளி விட்டு மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் தமிழர் தமிழா நிகழ்ச்சி ஜோதிடர்கள் வெர்சஸ் மக்கள் என இரு தரப்பினர் கலந்து கொண்டு உரையாடிய போது மாரிமுத்து சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ஜோதிடத்தின் மீது தனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை என ஜோதிடர்களை வெளுத்து வாங்கினார். இதனால் ஜோதிடர்களுக்கும் மாரிமுத்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது ஜோதிடர்கள் மாரி முத்து மீது புகார் அளித்துள்ளனர். இதனால் அவருக்கு புது சிக்கல் உருவாகி உள்ளது.