ஆஸ்பத்திரியில் வைத்து கரிகாலன் குணசேகரன் கரிகாலனை நக்கல் அடிக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் ஹாஸ்பிடல் கொண்டு வந்து சேர்த்த நிலையில் பெண்கள் எல்லோரும் ஜீவானந்தத்தை பார்க்க முடிவெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி ஜீவானந்தத்தை பார்க்க கௌதமுக்கு போன் பண்ணி ஏற்பாடு பண்ண சொல்லு என்று சொல்ல ஜனனி என்னால அவன் கிட்ட பேச முடியாது என சொல்கிறார். உடனே ஈஸ்வரி சரி நான் பேசுறேன் என முடிவெடுக்கிறார்.

அடுத்ததாக கண்விழிக்கும் குணசேகரன் என்ன எப்படி பார்த்துக் கொண்டு வந்தீங்க என கேள்வி கேட்க பைக்ல உட்கார வைத்து தான் கூட்டிட்டு வந்தேன் மாமா உங்க நிலைமை இப்படி ஆகிவிட்டது என்று சொல்ல குணசேகரன் என் மானத்தை நார்நாரா கிழிச்சிட்டீங்களேடா என புலம்புகிறார்.