கையில் பணத்துடன் ஞானம் கலங்கி நிற்க சக்தி அட்வைஸ் செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஞானம் மீனாட்சி அம்மனை கையெடுத்து கும்பிட்டு விட்டு பணத்தை எடுத்து வந்து கதிரிடம் கொடுத்து போய் முதல்ல பீஸை கட்டு என்று சொல்ல நந்தினி வேண்டாம் என்று தடுத்து நிறுத்துகிறார்.
அதன் பிறகு போலீஸ் அதிகாரி ஜீவானந்தம் நமக்கு ஒரு தடையாய் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறேன் என்று சொல்ல ஜனனி நிச்சயமாய் இருக்காது என்று சொல்கிறார். அடுத்து இங்கே நான் கையாலாகாதவன் என்று ஞானம் கலங்கியாக முதல்ல நான் சொல்றதை கேளுங்க என்று சக்தி ஏதோ அட்வைஸ் கூறுகிறார்.