
சொத்தை இழந்த குணசேகரன் அடுத்த திட்டத்தை தீட்டி உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் 40% ஷேர் ஜீவானந்தம் பெயருக்கு மாறிய நிலையில் குணசேகரன் போலீஸ் ஸ்டேஷன் சென்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோவில் குணசேகரனும் தம்பிகளும் ஒரு கோவில் வாசலில் கோபமாக உட்கார்ந்து இருக்கின்றனர்.

வீட்டுக்கு வந்த ஜனனி அப்பத்தாவிடம் அந்த ஜீவானந்தம் நல்லவன் இல்லை, 40% சொத்து போச்சு என அழுது புலம்ப இங்கே ஆடிட்டர் சொத்து திரும்ப கிடைக்கணும்னா அது உங்க வீட்டு பொம்பளைங்களால் தான் முடியும் என சொல்கிறார்.

இதனால் குணசேகரன் அந்த ஜனனியால போன சொத்தை அவளை வச்சே வாங்குகிறேன் பாரு என புது திட்டம் போடுகிறார். பிறகு வீட்டுக்கு வரும் குணசேகரன் வீட்டை பார்த்து கண்ணீர் விட்டு கூறுகிறார்.
