
ஈஸ்வரி கண்ணீர் விட கதிர் மாஸ்டர் பிளான் போட நந்தினி ஷாக் கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஈஸ்வரி அந்த பங்ஷனை நினைத்து கவலைப்பட ஜனனி கவலைப்படாதீங்க அப்பத்தா நம்பிக்கையோடத்தான் கிளம்பி இருக்காங்க நிறைய மாற்றங்கள் நடக்கப்போகுது என சொல்கிறார்.
அடுத்ததாக விசாலாட்சி வீட்டில் குழந்தைகளிடம் உங்கள காய போட்டு இருக்கணும், அப்படி பண்ணி இருந்தா இப்படி எல்லாம் பேச மாட்டீங்க என்று சொல்ல நிறுத்துங்க அப்பத்தா சும்மா சோறு சோறுனு பேசாதீங்க என்று தர்ஷினி பதில் கொடுக்க கதிர் ஏய் என அதட்டுகிறார்.

அடுத்து கதிர் ஊருக்கு கிளம்புவதாக சொல்ல கரிகாலன் நிறைய ஏற்பாடுகள் செய்ய வேண்டி இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்க அங்கு வரும் நந்தினி திருவிழா ஏற்பாடா இல்ல வேற ஏதாவது என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.