
கரிகாலனிடம் சிக்கி உள்ளது ஜனனி டீம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இது சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
நேற்றைய எபிசோடில் ஜனனி டீம் அதிரையை கூட்டிக்கொண்டு தப்பிச்சென்ற நிலையில் இது ப்ரோமோ வீடியோவில் ஜான்சி ராணி குணசேகரனிடம் எங்க உங்க வீட்டு மருமகளுங்க என்ற கேள்வி கேட்கிறார்.
மறுபக்கம் சக்தி ஜனனிக்கு போன் செய்து எங்க இருக்கீங்க என்று கேட்க ஜனனி இன்னும் வண்டியே வரல என சொல்கிறார். பிறகு சக்தி சீக்கிரம் வந்துடுங்க என்று சொல்ல அந்த இடத்திற்கு கரிகாலன் வந்து நிற்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
