
முட்டா பையன் மாதிரி கேள்வி கேட்கிற என குணசேகரனை அவமானப்படுத்தி உள்ளார் கரிகாலன்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் குணசேகரன், கரிகாலன், ஞானம், கதிர் ஆகியோர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க கரிகாலன் இந்த வீட்டில் என் உலகம், உயிர் எல்லாமே இருக்கு என சொல்ல குணசேகரன் நக்கலாக கேள்வி கேட்க கரிகாலன் பேசுறதெல்லாம் நல்லா பேசுற, ஆனால் முட்டா பையன் மாதிரி கேள்வி கேட்கிற என அவமானப்படுத்துகிறார்.


அடுத்ததாக ஜனனி நந்தினியிடம் எதையோ சொல்ல லெட்டருடன் வர திடீரென கரிகாலன் கிச்சனுக்குள் வந்து விடுகிறார். இதனால் இன்றைய எபிசோட் செம கலாட்டாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

