குணசேகரன் கேட்ட கேள்வியால் தலையில் இடியை இறக்கி உள்ளார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியின் அப்பா வீட்டுக்கு வந்து ஈஸ்வரிய கல்யாணம் பண்ணிக் கொடு என்று கேட்ட பையன் தான் அந்த ஜீவானந்தம் என்று உண்மையை உடைத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் ஜீவானந்தத்தை பார்க்க போன ஈஸ்வரி வீட்டுக்கு வர வெளியில் உட்கார்ந்து இருந்த குணசேகரன் அந்த ஜீவானந்தம் கிட்ட சொல்லி அனுப்பினானா என கேள்வி கேட்கிறார்.

கூடவே கதிரும் சொல்லி இருப்பான் என்று சொல்ல ஏய் கதிர் மரியாதையா பேசு என கொந்தளிக்கிறார் ஈஸ்வரி. அதன் பிறகு குணசேகரன் தன்னுடைய மகனும் மகளும் வர அவர்களிடம் இங்க நடக்குற கூத்தெல்லாம் பாத்துட்டு இருக்கீங்களா என்று சொல்ல ஈஸ்வரி மனுஷனா நீ, குழந்தைங்க கிட்ட என்ன பேச்சு பேசிட்டு இருக்க என ஆவேசப்படுகிறார்.

உடனே உங்க அப்பா தாரேன்னு சொல்லி இருந்தா என்றே குணசேகரன் கேட்க ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பேன் என சொல்லி பேரதிர்ச்சி கொடுக்கிறார் ஈஸ்வரி.