குணசேகரன் தலையில் பெரிய இடியை இறக்கி உள்ளார் ஈஸ்வரியின் அப்பா.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். நேற்று குணசேகரன் வீட்டு பெண்கள் எல்லாரும் ஜீவானந்தம் மற்றும் அப்பத்தாவை சந்திக்க சென்றிருந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன எந்த குறித்து பார்க்கலாம் வாங்க.
இது குறித்து வெளியான ப்ரோமோ வீடியோவில் குணசேகரன் வீட்டுக்கு வரும் ஈஸ்வரியின் அப்பா இந்த குடும்பத்துடன் எதையோ சொல்ல குணசேகரன் வாயடைத்து நிற்க விசாலாட்சி எங்க வந்து என்ன பேசணும்னு தெரியாதா உங்களுக்கு என்று கோபப்படுகிறார்.
அதனை தொடர்ந்து ஈஸ்வரியிடம் போனில் பேசும் போது ஈஸ்வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி கொடுங்கன்னு கேட்ட பையன் தான் அந்த ஜீவானந்தம் என்று அவர் சொன்ன விஷயங்கள் தெரிய வருகிறது. இதனால் மொத்தமாக உடைந்து போய் வெளியே வந்து உட்காருகிறார் குணசேகரன்.