
எதிர் நீச்சல் சீரியல் பிரபலங்கள் வாங்கும் சம்பளம் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். தொடர்ந்து ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்பர் 1 சீரியலாக எதிர் நீச்சல் இருந்து வருகிறது.
மாரி முத்து, மதுமிதா, ஹரிப்ரியா, கமலேஷ், ப்ரியதர்ஷினி உட்பட பலர் இந்த சீரியலில் இணைந்து நடித்து வருகிறார்கள். இவர்கள் வாங்கும் ஒருநாள் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.

ஆதி குணசேகரனாக மிரட்டி வரும் மாரி முத்து ஒரு நாளைக்கு ரூ 20,000 சம்பளமாக வாங்குகிறார் என தெரிய வந்துள்ளது.
அடுத்ததாக மதுமிதா, ஹரிப்பிரியா, கமலேஷ் ஆகியோர் ரூ 15,000 சம்பளமாக வாங்குகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக சபரி பிரஷாந்த், ப்ரியதர்ஷினி ஆகியோர் ஒரு நாளைக்கு ரூ 10,000 சம்பளமாக வாங்குவதாக தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
