England Cricket Team : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019, Pro KabaddiLeague

England Cricket Team :

இங்கிலாந்து – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

கத்துக்குட்டி அணியான அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து வீரர்கள் ரன்குவிக்கும் உத்வேகம் களம் இறங்கினர். ஆனால் அது அடியோடு மாற்றி அமைத்து அயர்லாந்து பந்து வீச்சாளர்கள் தங்களின் பலத்தை காட்டினர்.

தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஜேசன் ராய் ஆகியோர் களம் இறங்கினர். ராய் 5 ரன்னிலும், ரோரி பர்ன்ஸ் 6 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த தொகை – இத்தனை கோடியா!

3-வது வீரராக களம் இறங்கிய டென்லி முடிந்த மட்டில் ரன் சேர்த்தார், ஜோ ரூட் (2), பேர்ஸ்டோவ் (0), மொயீன் அலி (0), கிறிஸ் வோக்ஸ் (0) அடுத்தடுத்து வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 43 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

டென்லி 23 ரன்களும், சாம் குர்ரான் 18 ரன்களும், ஸ்டோன் 19 ரன்களும் அடிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 23.4 ஓவரிலேயே 85 ரன்னில் சுருண்டது. மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னைக் கடந்தனர்.

அயர்லாந்து அணி சார்பில் முர்டாக் 5 விக்கெட்டும், அடைர் 3 விக்கெட்டும், ரங்கின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.