
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை தொடர்ந்து மற்றும் ஒரு சீரியல் முடிவுக்கு வர உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது போராக சென்று கொண்டிருக்கிறது.

சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வாங்கப்பா என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில் வெகு விரைவில் இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வந்து இரண்டாவது சீசனை அடுத்த நாளே தொடங்க உள்ளது விஜய் டிவி. விரைவில் சீரியல் கிளைமாக்ஸ் எதிர்பார்க்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.
இப்படியான நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து மேலும் ஒரு சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மதிய வேளையில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய ஹிட் அடித்த தொடரான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் தான் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கண்மணியின் பித்தலாட்டங்கள் அனைத்தும் வெற்றிக்கு தெரிய வந்து அபியுடன் ஒன்று சேருவது போல இந்த சீரியல் கிளைமாக்ஸ் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலால் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.