Eeshwaran Movie Release Date

தளபதி விஜய் உடன் சிம்பு மோத இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Eeshwaran Movie Release Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் பொங்கல் தினத்தில் மாஸ்டர் படத்துடன் மோதும் என கூறப்பட்டு வந்தது.

தற்போது அதனை படக்குழு உறுதி செய்துள்ளது. ஈஸ்வரன் திரைப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் படம் உலகம் முழுவதும் ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் மோதிக் கொள்ழதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.