Edappadi Palanisamy:
Edappadi Palanisamy:

Edappadi Palanisamy : நெல்லை: 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கும் ஒரே நாடு தமிழ்நாடு என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதமாக பேசியுள்ளார்.

மேலும் ரூ.2000 கோடியில் அமையவுள்ள உணவு பூங்காவில் விளைபொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம் என கூறியுள்ளார்.

நெல்லை அம்பாசமுத்திரத்தில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

பிரச்சாரத்தில் பேசியதாவது, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்ற கட்சிகளின் கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது என்று கூறினார்.

“நாட்டிலேயே 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக கொடுக்கும் ஒரே அரசு தமிழக அரசுதான் ” என்று பெருமையாக கூறியுள்ளார்.

மேலும் மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்காக அதிமுக தலைமையில் பாஜ, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளோம்.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மெகா கூட்டணி என்றும், மக்களுக்கான கூட்டணி என்றும், 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் பழனிச்சாமி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடைய ஆட்சி இருந்தால்தான் நாடு செழிக்கும், அப்போதுதான் தமிழகத்துக்கும் தேவையான நிதி கிடைக்கும் என கூறினார்.

மேலும் சில துரோகிகளின் சதி வேலையின் காரணமாக 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

பிரதமர் மோடி குறித்து பேசுகையில், ‘பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் நம் நாடு பாதுகாக்கப்படும், தமிழகம் வளம் பெறும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் மத்தியில் வேறு கட்சி ஆட்சி வந்தால்,நமக்கு தேவையான நிதி கிடைக்காது என்று கூறியுள்ளார். என்று முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.