E-Pass Method Dropped in Puducherry
E-Pass Method Dropped in Puducherry

இ பாஸ் நடைமுறை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.

E-Pass Method Dropped in Puducherry : இந்தியாவில் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த நிலையில் தற்போதுகொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

மேலும் இனி இ-பாஸ் முறை தேவையில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர்ந்து இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வருகிறது.

சமீபத்தில் மத்திய அரசு இ-பாஸ் முறை தளர்வுகளுக்கு முரணானது எனவும் இந்த முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும். மாவட்டமிட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல பொது போக்குவரத்தை தொடங்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.

இதனையடுத்து புதுச்சேரி மாநில அரசு இ-பாஸ் முறையை முற்றிலுமாக கைவிடுவதாக தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்குள்ளே செல்லவும் புதுச்சேரியை விட்டு மற்ற மாநிலங்களுக்கு சென்று வரவும் இ-பாஸ் தேவையில்லை என தெரிவித்துள்ளது.

இதனால் புதுச்சேரி மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்திலும் இ-பாஸ் முறை கைவிடப்படுமா? பொதுப் போக்குவரத்து மீண்டும் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

பொதுப் போக்குவரத்து இல்லாமல் சாதாரண மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வர பெரிதும் சிரமப்படுவதாகவும் கூறி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.