விஜய் அஜித் சூர்யா நடிப்பில் உருவாக இருந்து ட்ராப் ஆன திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Dropped Movies of ThalaThalapathy and Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் விஜய் சூர்யா. மூவருக்குமே உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர்களது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றிவாகை சூடியுள்ளது. சில படங்கள் தோல்வியை தழுவியுள்ளது. மேலும் இவர்களது நடிப்பில் உருவாக இருந்து ட்ராப் ஆன சில படங்களும் உண்டு.

19-ந்தேதி சென்னையில் கிரிக்கெட் : தமிழக அரசு அனுமதி

அப்படி ட்ராப் ஆன படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

அஜித் :

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் மிரட்டல். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் படம் டிராப் ஆனது.

எங்க Family-ல எல்லோருக்கும் Corona! – Actress Sona Latest Press Meet | HD

ஏபி ராதா இயக்கத்தில் மகா என்ற திரைப்படம் உருவாக இருந்து பின்னர் டிராப் ஆனது.

சரவண சுப்பையா இயக்கத்தில் இதிகாசம் என்ற பாடல் உருவாக இருந்து டிராப் ஆனது.

விஜய் :

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் யோகன் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படம் உருவாக இருந்து பின்னர் டிராப் ஆனது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியானது.

சீமான் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பகலவன் என்ற திரைப்படம் உருவாக இருந்து பின்னர் டிராப் ஆனது.

சூர்யா :

ஹரி இயக்கத்தில் உருவாக இருந்த அருவா, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருந்த சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகிய படங்கள் டிராப் ஆனது.