ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான டிரைவர் ஜமுனா படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் கின்ஸ்லின் இயக்கத்தில் அப்பாகுரு மற்றும் கார்த்திக் எம் சோமசுந்தரம் உள்ளிட்டோர் இணை இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் டிரைவர் ஜமுனா.

படத்தின் கதைக்களம் :

அப்பாவின் இழப்பு, அம்மாவின் உடல்நிலை, வீட்டை அடமானம் வைத்து விட்டு ஓடிய தம்பி என தன்னை சுற்றி இருக்கும் பிரச்சனைகளால் அப்பா விட்டு சென்ற கால் டாக்ஸி வேலையை கையில் எடுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

மறுபக்கம் முன்னால் எம்எல்ஏவான ஆடுகளம் நரேனை கொல்ல ஒரு கும்பல் திட்டம் தீட்டி ஐஸ்வர்யா ராஜேஷின் காரில் ஏறி பயணிக்கிறது. இவர்களைப் போல் பின்தொடர்ந்து வர அதன் பிறகு என்ன நடந்தது? ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த கும்பலிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார்? இந்த கும்பலை போலீஸ் பிடித்ததா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை.

படத்தை பற்றிய அலசல் :

ஐஸ்வர்யா ராஜேஷ் ஜமுனாவாக படத்தின் கதை மொத்தத்தையும் தூக்கி நிறுத்துகிறார். அவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் நரேன் எதார்த்தமான நடிப்பை கொடுத்து கவனம் ஈர்க்கிறார்.

மற்ற நடிகர்கள் எல்லோரும் படத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து பலம் சேர்த்துள்ளனர்.

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.

இயக்குனர்கள் படத்தை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் சில இடங்களில் சில சொதப்பல்கள் இருக்கத்தான் செய்கிறது.

தம்ப்ஸ் அப் :

1. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் நரேன் நடிப்பு.

2. கதைக்களம்

தம்ப்ஸ் டவுன் :

1. லாஜிக்கல் தவறுகள்

2. அபிஷேக்கின் காமெடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.