தனுஷ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

மேலும் தனுஷ் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனுஷ் 50, சத்யஜோதி பிலிம்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

இந்த நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் தனுஷ் 50 படத்தின் டைட்டில் மற்றும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ஆகியவை தனுஷின் பிறந்த நாளான வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தனுஷ் பிறந்தநாளில் டபுள் ட்ரீட் கொண்டாட்டம் தான் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.