Doctor Movie Update Alert
Doctor Movie Update Alert

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டாக்டர் படக்குழு செம அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளது.

Doctor Movie Update Alert : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக, தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் பல்வேறு தடைகளை தாண்டி இன்று உச்சத்தை அடைந்துள்ளார்.

இவரது நடிப்பில் தற்போது டாக்டர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடனே படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் சென்சார், ரன்னிங் டைம் குறித்து படக்குழு கொடுத்த விளக்கம்

இந்த நிலையில் தற்போது இன்று மாலை 7 மணிக்கு இப்படத்திலிருந்து சூப்பரான அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் அந்த அப்டேட்டிற்காக ஒட்டு மொத்த சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.