
விஜய் கல்வி விருது விழாவிற்காக மொத்த செலவு எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் படங்களில் நடித்து வருவது ஒரு பக்கம் இருக்க வரும் சட்டமன்ற தேர்தலில் இருந்து அவர் அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தளபதி விஜயின் அரசியலில் அடி எடுத்து வைப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளார். அதன் ஒரு பகுதியாகவே நடந்து முடிந்த பத்தாம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்தலில் அதிக மதிப்பெண்கள் மாணவிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு விழா நடத்தினார்.
சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. பெற்றோர்களுடன் வந்த மாணவ மாணவிகள் தங்குவதற்கும் சாப்பிடுவதற்குமான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இந்த விழாவிற்காக மொத்தம் இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு தளபதி விஜய் வைர நெக்லஸை பரிசாக வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
