அஜித்துக்கு புகழ்ச்சி விஜய்க்கு இகழ்ச்சி: திவ்யா சத்யராஜ் பதிவு, வைரல்..

திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு காண்போம்..
‘உங்களுக்கு விஜய் பிடிக்குமா அல்லது அஜித் பிடிக்குமா என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். நான் எப்போதும் சொல்வதைப் போல எனக்கு அஜித் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர்.
மிக முக்கியமாக அவர் பெண்களை மதிக்கிறார். அவர் ஒரு குடும்பத் தலைவர். அவர் தனது வாழ்க்கையில் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். மேலும் அவரது ரசிகர்கள் அவரை போற்றிப் பின்பற்றுகிறார்கள்.
அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெண்களைத் அவமதிப்பதில்லை. அவர்கள் கோழைகள் அல்ல. அவர்கள் கண்ணியத்துடனும், தரத்துடனும் நடந்து கொள்கிறார்கள். அஜித் ஒருபோதும் தனது ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களை அச்சுறுத்தவோ அல்லது அவமதிக்கவோ அனுமதிக்க மாட்டார். விளம்பரம் தேடாமல் அமைதியாக பலருக்கு அவர் உதவி செய்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகங்களைப் ஊக்குவிக்கும் அல்லது அமைதியாக இருக்கும் எந்தவொரு நபரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் என்று நான் நம்புகிறேன்’ என்று திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. அண்மையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய அவர், ‘துணை முதல்வர் உதயநிதி ஏசி கேரவனில், சொகுசு விமானத்தில் நண்பர்களின் திருமணத்துக்கு செல்லும் போலி அரசியல்வாதி கிடையாது’ என்று கூறியிருந்தார்.
இதனை வைத்து அவர் தவெக தலைவர் விஜய்யைத்தான் மறைமுகமாக சாடுகிறார் என விஜய் ரசிகர்கள் வலைதளங்களில் திவ்யா சத்யராஜை கடுமையாக விமர்சித்து வந்தனர். இச்சூழலில் திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள தற்போதைய பதிவும் விஜய் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
