Distributors Comment on Master Release
Distributors Comment on Master Release

மாஸ்டர் திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

Distributors Comment on Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தை விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் விஜய்-க்கு வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.

சாந்தனு, சேத்தன், சஞ்சீவ் என பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படத்தை படக்குழுவினர் ரிலீஸ் செய்ய இருந்தனர்.

ஆனால் அதற்குள் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டதால் இந்த முடிவு கைவிடப்பட்டது.

மாஸ்டர் டிரைலர், பட ரிலீஸ் – என மொத்த அப்டேட்டையும் ஒன்றாகக் கொடுத்த லோகேஷ் – ரசிகர்களை பரபரப்பாக்கிய தகவல்கள்.!

தற்போது தமிழக அரசு படங்களில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு அனுமதி அளித்திருப்பதால் மாஸ்டர் படத்தின் எடிட்டிங் வேலைகள் தொடங்கியுள்ளன.

இதனால் அடுத்து ட்ரைலர் வெளியாகும், விரைவில் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என விநியோகிஸ்தர்கள் கூறி வருகின்றனர்.

அதேசமயம் படக்குழு படத்தின் வேலைகளை முடித்துவிட்டு ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்க முடியாது. அப்படி வைத்திருந்தால் இந்த படம் இணையத்தில் லீக் ஆகி விட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் அச்சப்பட்டு வருகின்றனர்.

மேலும் திட்டமிட்ட தேதியில் மட்டும் இப்படம் வெளியாகி இருந்தால் பிகில் வசூலித்த 300 கோடியை அசால்டாக இந்த படம் தாண்டியிருக்கும் என கூறுகின்றனர்.