Lokesh Kanagaraj Says About Master Release
Lokesh Kanagaraj Says About Master Release

மாஸ்டர் படம் பற்றி அடுத்த அதிரடி பேட்டி கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh Kanagaraj Says About Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

ஏப்ரல் 9 ஆம் தேதியே ரிலீசாக வேண்டிய படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போய்விட்டது.

இது என்ன சோதனை : கைவிரித்த தயாரிப்பாளர்கள், வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்ட விஜய் – மாஸ்டர் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்.!

ரசிகர்கள் அனைவரும் படம் எப்போது ரிலீசாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்போதைக்கு உயிரை காப்பாற்றிக் கொள்வோம், படம் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் செய்து கொள்ளலாம் என லோகேஷ் கனகராஜ் கூறி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்தார் லோகேஷ் கனகராஜ்.

அப்போது மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேட்க படத்தின் வேலைகள் அனைத்தும் ஓவர். தற்போது ப்ரமோஷன் மற்றும் ரிலீஸ் மட்டும் தான் பாக்கி என கூறியுள்ளார்.

மேலும் எப்போது ரிலீஸ் ஆனாலும் மாஸ்டர் தரமான ஆக்சன் படமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ரிலீஸ் தேதி முடிவு செய்த பிறகே டிரைலர் வெளியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.