மாவீரன் படத்தை பாராட்டி இயக்குனர் ஷங்கர் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் கடந்த 14ஆம் தேதி திரையரங்குகளில்.

பலமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் அவர்கள் இப்படம் குறித்து வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், “மாவீரன் திரைப்படம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இயக்குனர் மடோன் அஸ்வினின் திறமை சினிமாவில் நிலைத்து நிற்பார் என்பதை காட்டுகிறது. மாஸான சிறந்த பொழுதுப்போக்கு படம். சிவகார்த்திகேயன் பாராட்டுக்குரிய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிதி கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு சிறப்பாக நடித்துள்ளனர்” என்று படகுழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து பகிர்ந்து இருக்கிறார்.