நடிகர் பார்த்திபன் இயக்குனர் மணிரத்தினிடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து உரையாடி இருக்கும் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். இவர் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் மணிரத்தினத்திடம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தை ரீ-ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர் , PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் இதுகுறித்து மணிரத்தினம் கொடுத்த பதிலையும் இணைத்துள்ளார். அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தை சில இடங்களில் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக மணிரத்னம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.